தலைப்புச் செய்தி

Wednesday, March 21, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி


நெல்லை:சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுகவுக்கு 13 ஓட்டுக்களும், மதிமுகவுக்கு 3 ஓட்டுக்களும் கிடைத்தன.
ஆரம்பத்திலிருந்தே முத்துச்செல்வி முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை விட மற்ற வேட்பாளர்கள் வெகுவாக பின்தங்கியிருந்தனர் .
அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வி 94,977 வாக்குகளையும், திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் 26,220 வாக்குகளையும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 20,678 வாக்குகளையும் பெற்றனர்.
வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். முத்துச் செல்வியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சங்கரன்கோவில் இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி"

Post a Comment