தலைப்புச் செய்தி

Wednesday, March 21, 2012

முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க மறுப்பு


ஆதிக்க சக்திகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எறிந்தால் தான், அடித்தட்டு மக்கள் அநியாயங்களிலிருந்து விடுபட முடியும்.
மார்ச் 19, டெல்லி மாநகராட்சி, நர்சரி பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களை சேர்க்க மறுக்கும் விவகாரம், நேற்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இது குறித்த கேள்வியை எழுப்பினார். 
முஸ்லிம் குழந்தைகளை சேர்ப்பதில் பார பட்சம் காட்டும் டெல்லி நிர்வாகத்தை கண்டித்து,  ராம் விலாஸ் பாஸ்வான் பேசிக்கொண்டிருந்த போது, "பாசிச பா.ஜ.க" உறுப்பினர்கள், அவரை பேச விடாமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். 
முஸ்லிம்கள், தங்கள் குழந்தைகளை "மதரசாவில்" சேர்க்கும் போது, அவர்களுக்கு எதற்கு பள்ளிக்கல்வி, முதலில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை மதரசாவிற்கு அனுப்புவதை நிறுத்தட்டும், பிறகு, அவர்களுக்கான பள்ளிக்கல்வியை பற்றி யோசிப்போம் என்றனர், பாசிச பா.ஜ.க, உறுப்பினர்கள்.  
இதை தொடர்ந்து, ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஆதரவாக, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் தாரிக் அன்வர், மற்றும் இன்னொரு ராஜயசபா உறுப்பினர் முஹம்மத் அதீப் உள்ளிட்ட உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். 92 பள்ளிகளில் உருவாக்கப்பட்ட,12,399 இடங்களில் முஸ்லிம் குழந்தைகளுக்கு, வெறும் 208 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளது, என்ற புள்ளி விவரமும் கொடுத்து வாதித்தனர்.  
இது, 2 சதவீதத்தை விட குறைவு. (தலை நகரம் டெல்லியில், பெரும் எண்ணிக்கையில் பரவலாக வாழும் முஸ்லிம்களின் ஜனத்தொகை, 25%.) இது தவிர, 64 பள்ளிகள், தங்களது சேர்க்கை விவரங்களை கொடுக்க மறுப்பதாகவும், கூறி வாதிட்டனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க மறுப்பு"

Post a Comment